உள்ளூர் செய்திகள்

பெண்களின் சட்ட உரிமைகள் குறித்த கருத்தரங்கு

Published On 2022-08-16 07:54 GMT   |   Update On 2022-08-16 07:54 GMT
  • பெண்களின் சட்ட உரிமைகள் குறித்த கருத்தரங்கு நடந்தது.
  • இந்த நிகழ்ச்சியில் பல துறைகளைச் சார்ந்த 150 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

சிவகாசி

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் வணிகவியல் நிறும் செயலரியல் துறை மற்றும் சட்ட விழிப்புணர்வுக் கழகம், சிவகாசி இன்னர் வீல் கிளப்புடன் இணைந்து ''பெண்களின் சட்ட உரிமைகள்'' என்ற தலைப்பில் சிறப்பு விரிவுரையை நடத்தியது.

வழக்கறிஞர் கார்த்தீஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசுகையில், பெண்களுக்கான மிக முக்கிய சட்ட உரிமைகளை விளக்கினார். உடல் ரீதியாகவோ அல்லது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் பின்தொடரும் மற்றும் தொடர்பு கொள்ளும் ஆணுக்கு எதிராகவோ புகார் செய்ய ஒவ்வொரு பெண்ணுக்கும் உரிமை உண்டு என்றார்.

துறைத் தலைவர் மற்றும் இணைப்பேராசிரியர் செந்தில்குமார் வரவேற்றார். சட்ட விழிப்புணர்வுக் கழக ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகபாண்டி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை உதவிப்பேராசிரியர் ஜாஸ்மின் பாஸ்டினா செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் பல துறைகளைச் சார்ந்த 150 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News