உள்ளூர் செய்திகள்

பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு

Published On 2022-07-11 08:03 GMT   |   Update On 2022-07-11 08:03 GMT
  • சிவகாசி மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது.
  • அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிவகாசி

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக அளவில் காணப்படும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் டீ கப்புகள், சாதாரண பிளாட்பார கடைகள் முதல் பெரிய கடைகள் மற்றும் டீக்கடைகள், உணவகங்களில் பயன்பாடு அதிகளவில் இருக்கிறது.

ஜூன் 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் அறிவித்திருந்தார். ஆனால் இதுவரை அதிகாரிகள் எந்த ஒரு கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ளவில்லை. பிளாஸ்டிக் பைகள் மற்றும் டீ கப்புகளை பயன்படுத்துவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.

பிளாஸ்டிக் பைகள் மற்றும் டீ கப்புகள் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய உடல் நல குறைபாடுகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்க மாநகராட்சி மேயர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

Similar News