உள்ளூர் செய்திகள்

சுவடியில் பயிற்சி பட்டறை

Published On 2023-02-19 13:33 IST   |   Update On 2023-02-19 13:33:00 IST
  • ராஜரத்தினம் மகளிர் கல்லூரியில் சுவடியில் பயிற்சி பட்டறை வகுப்பு நடந்தது.
  • தொல்ஆவணங்கள் பட்டயவகுப்பு பயிலும் 44 மாணவிகளும், தமிழ்த்துறை பேராசிரியர்கள் 17 பேரும் பங்கேற்று பயனடைந்தனர்.

சிவகாசி

சிவகாசி ராஜரத்தினம் மகளிர் கல்லூரியின் முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறையில் தொல் ஆவணங்கள் பட்டய வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு "சுவடியியல்" பயிற்சிப்பட்டறை நடந்தது. முதல்வர் பழனீஸ்வரி தலைமை தாங்கினார். தமிழ்த்துறைத்தலைவர் பொன்னி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் தனலட்சுமி வரவேற்றார். மதுரை அரசு அருங்காட்சியகத்தின் மாவட்ட காப்பாட்சியர் மருதுபாண்டியன் "சுவடி - ஓர் அறிமுகம், சுவடிப்பதிப்பு" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மதுரை, பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் கல்வெட்டு ஆய்வாளர். உதயகுமார் "சுவடி அழிவிற்கான காரணங்கள் மற்றும் பாதுகாக்கும் வழிமுறைகள்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் பூங்கோதை, நன்றி கூறினார். இதில் தொல்ஆவணங்கள் பட்டயவகுப்பு பயிலும் 44 மாணவிகளும், தமிழ்த்துறை பேராசிரியர்கள் 17 பேரும் பங்கேற்று பயனடைந்தனர்.

Tags:    

Similar News