உள்ளூர் செய்திகள்

மேற்கு தொடர்ச்சி மலையில் போராடி தீயை அணைத்த வனத்துறையினர்

Published On 2023-04-21 13:44 IST   |   Update On 2023-04-21 13:44:00 IST
  • ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலையில் தீ விபத்து ஏற்பட்டது.
  • இந்த விபத்தில் அரியவகை மரங்கள், செடிகள் கருகின.

ஸ்ரீவில்லிபுத்தூர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி அண்மையில் புலிகள் காப்பமாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே இந்த வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. யானை, சிறுத்தை, புலிகள், சருகுமான்கள், புள்ளி மான்கள், மிளாமான்கள் போன்றவை அதிகளவில் உள்ளன.

இங்குள்ள பேய் மலை கடல் மட்டத்தில் இருந்து 1500 மீட்டர் உயரத்தில் உள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் மலையில் உள்ள பெரும்பாலான இடங்கள் வறண்டு காணப்படுகிறது. வனவிலங்குகளும் தண்ணீரை தேடி ஊருக்குள் வரும் நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு பேய் மலையில் உள்ள மொட்டை என்ற இடத்தில் இடி, மின்னல் தாக்கியது. இதனால் அங்கிருந்த காய்ந்த மரங்கள் தீப்பற்றியது. சிறிது நேரத்தில் அருகில் இருந்த மரம், செடி, கொடிகளிலும் தீ பரவ தொடங்கியது.

இதைப்பார்த்த மலைவாழ் மக்கள் உடனே விருதுநகர் மாவட்ட வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இரவு விரைந்து வந்த வனத்துறையினர் தீவிபத்து நடந்த பகுதிக்கு சென்று பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் தீ பரவாமல் தடுத்தனர். இந்த தீவிபத்து மலையில் இருந்த அரியவகை மரம், செடி, கொடிகள் கருகின.  

Tags:    

Similar News