உள்ளூர் செய்திகள்

தொழில் நிதி வழிகாட்டும் மையம் சார்பில் நடந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலெக்டர் மேகநாதரெட்டி, போட்டி தேர்வுக்கான புத்தகங்கள் அடங்கிய கண்காட்சியை பார்வையிட்டார். 

மாணவர்கள் இலக்கை நிர்ணயம் செய்து கொண்டு படிக்க வேண்டும்

Published On 2023-01-05 13:42 IST   |   Update On 2023-01-05 13:42:00 IST
  • மாணவர்கள் இலக்கை நிர்ணயம் செய்து கொண்டு படிக்க வேண்டும் என்று கலெக்டர் மேகநாதரெட்டி பேசினார்.
  • சிவகாசி எஸ்.எப்.ஆர்.கல்லூரியில் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடந்தது.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி எஸ்.எப்.ஆர்.கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது. இதில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-

மாணவர்கள் கல்லூரி படிப்பை முடித்து செல்லும்போது அவர்க ளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்து வது இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.

இந்த புத்தாண்டில் மாண வர்கள் தங்களுக்கென்று தனி ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொண்டு செயல்பட வேண்டும். மாணவர்கள் கல்லூரியில் படிக்கும்போது ஒரு தெளிவான நோக்கத்தை வகுத்துக்கொள்ள வேண்டும்.

கல்லூரி படிப்பை முடிப்பதற்கு முன்பே ஒரு தெளிவான இலக்கை நிர்ணயிக்க வேண்டும். அப்போது தான் இலக்கை நோக்கி நகருவதற்கு எளிதாக இருக்கும்.

தற்போது உள்ள சூழ்நிலையில் உள்ளது போல், முன்காலத்தில் நல்வழிகாட்டுதலுக்கான வாய்ப்புகள் அதிகம் இல்லை. ஆனால் தற்போது உயர்கல்வி, வேலைவாய்ப்பு, போட்டித் தேர்வுகள் உள்ளிட்டவைகளுக்கு வழிகாட்டுவதற்கு தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

மேலும் பட்டப்படிப்பு படித்து முடித்த பிறகு இந்தியாவில் நிறைய மத்திய, மாநில பல்கலைக்கழகங்கள் உள்ளது. இந்த பல்கலைக் கழகங்களின் சேர்வதற்கு போட்டித் தேர்வுகள் உண்டு. பட்டப்படிப்பு படிக்கும் போதே இந்த தேர்வுகளுக்கு உங்களை தயார் செய்து கொள்ள வேண்டும், இந்த பல்கலைகழகங்களில் சேர்ந்து பயிலும் போது வாழ்க்கையில் ஒரு நல்ல நிலையை அடைய முடியும்.

இவ்வாறு அவர் கூறி னார்.

முன்னதாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வா ணையம், இந்திய ஆட்சிப் பணித்தேர்வாணையம், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய கண்காட்சியை கலெக்டர் தொடங்கி வைத்து பார்வை யிட்டார்.

பின்னர் மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக பிரத்யேகமாக தயாரிக்க ப்பட்ட போட்டித் தேர்வு மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேட்டினை வெளியிட்டார்.

அதனைத்தொடர்ந்து கல்லூரி மாணவர்க ளிடையே நடைபெற்ற கட்டுரை போட்டியில் வெற்றி மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) மகா லட்சுமி, ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியின ருக்கான பயிற்றுவிப்பு மற்றும் வழிகாட்டல் நிலைய உதவி இயக்குநர் ஹரிபாஸ்கர், மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலர் ஞானபிரபா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (தொ.வ) பிரியதர்ஷினி, உதவி கலெக்டர் (பயிற்சி) ஷாலினி, உதவி பேரா சிரியர் (எஸ்.எப்.ஆர் கல்லூரி) நந்தினி, இளம் நிபுணர் சுமதி, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் கல்பனா மற்றும் அரசு அலுவலர்கள், மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Tags:    

Similar News