உள்ளூர் செய்திகள்

டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு

Published On 2023-10-09 14:06 IST   |   Update On 2023-10-09 14:06:00 IST
  • டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு நடந்தது.
  • அருப்புக் கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்தகுமாரை கைது செய்தனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலவனத்தம் கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. நேற்று மதியம் மேற்பார்வையாளர் மாரீஸ்வரின், விற்ப னையாளர் செந்தில்குமார் ஆகியோர் பணியில் இருந்தனர். அப்போது அங்கு வந்த கடம்பன் குளத்தை சேர்ந்த வசந்த குமார்(20) என்பவர் பணம் கொடுக்காமல் மது பாட்டில் களை கேட்டுள்ளார்.

ஆனால் ஊழியர்கள் அவரை கண்டித்து இங்கிருந்து செல்லுமாறு கூறினர். இதனால் ஆத்திர மடைந்த வசந்தகுமார், ஊழியர்களை தரக்குறைவாக பேசி விட்டு அங்கிருந்து சென்றார். சிறிது நேரத்தில் அங்கு வந்த வசந்தகுமார் பெட்ரோல் குண்டை கடை மீது வீசினார். ஆனால் அதிர்ஷ்ட வசமாக பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை.

இதனால் ஊழியர்கள் உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால் அதிர்ச்சி யடைந்த டாஸ்மாக் ஊழி யர்கள் வசந்தகுமாரை பிடிக்க முயன்றனர். அப் போது அவர் கீழே கிடந்த பாட்டிலை எடுத்து உடைத்து குத்தி விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் அருப்புக் கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்தகுமாரை கைது செய்தனர்.

Tags:    

Similar News