உள்ளூர் செய்திகள்

விநாயகர்கோவில் கும்பாபிஷேகத்தில் மதுரை ஆதீனம் பங்கேற்பு

Published On 2022-07-07 14:59 IST   |   Update On 2022-07-07 14:59:00 IST
  • விநாயகர்கோவில் கும்பாபிஷேகத்தில் மதுரை ஆதீனம் பங்கேற்றனர்.
  • சமூக சேவகர் ராமராஜ் தலை மையில் நற்பணி மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.

ராஜபாளையம்

ராஜபாளையத்தில் மாப்பிள்ளை விநாயகர்கோவில் உள்ளது. இங்கு திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு கடந்த 4-ந் தேதி விநாயகர் பூஜை, எந்திர ஸ்தாபனம், கலச ஸ்தாபனம் யாகசாலை பூஜை ஆகியவை நடந்தன.

அதன்பின்னர் 3-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு யோகினியர் லலிதா மகிளா சமாஜம் சுவாமிகள் கணபதி ஹோமத்தை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மங்கல வாத்திய நிகழ்ச்சி மற்றும் விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, சுதர்சன பூஜை லட்சுமி ஹோமம், தீப வழிபாடு நடைபெற்றது.

மாலை வாஸ்து பூஜை, வாஸ்து ஹோமம், முதல் கால யாக பூஜை, தீபாராதனை நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று காலை 2-ம் கால யாகபூஜை, மகாபூர்ண ஹூதி வழிபாட்டுடன் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மதுரை ஆதீனம் ஞா னசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். ஆதி வழி விடு விநாயகர் கோவில் அர்ச்சகர் சோமசுந்தரம் பட்டர், கார்த்திக் சாஸ்திரிகள் கும்பாபிஷேக பூஜைகளை நடத்தினர்.

பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் அழங்க ப்பட்டது. பின்னர் மாலையில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமான பொது மக்களும், பக்தர்களும் கலந்து கொண்டு வழிபட்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தர்மாபுரம் மாப்பிள்ளை விநாயகர்கோவில் நிர்வாகத்தினர், சமூக சேவகர் ராமராஜ் தலை மையில் நற்பணி மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News