உள்ளூர் செய்திகள்

ஆங்கிலத்துறை கருத்தரங்கம்

Published On 2023-01-03 08:27 GMT   |   Update On 2023-01-03 08:33 GMT
  • காளீஸ்வரி கல்லூரியில் ஆங்கிலத் துறை கருத்தரங்கம் நடந்தது.
  • 3-ம் ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை முதல் மற்றும் 2-ம் ஆண்டு மாணவர்கள் 64 பேர் இதில் கலந்து கொண்டனர்.

சிவகாசி

சிவகாசி காளீஸ்வரி கல்லூரி ஆங்கிலத்துறையின் நியூ ஐடோலா இலக்கியமன்றத்தின் சார்பில் சிறப்புக் கருத்தரங்கம் ''தற்கால இலக்கிய கோட்பாடுகள்'' என்ற தலைப்பில் நடந்தது.

துறைத்தலைவர் பெமினா வரவேற்றார். முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் முனைவர் ஜான் சேகரை, உதவிப்பேராசிரியர் சாந்தி அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினர் இலக்கிய விமர்சனம் மற்றும் ஆய்வு செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தன்னுடைய ஆய்வு கட்டுரையை ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர், துபாய், இலங்கையில் சமர்பித்துள்ளார்.

சிறப்பு விருந்தினர் பேசுகையில், இலக்கிய விமர்சனம் மற்றும் இலக்கிய கோட்பாடு என்றால் என்ன? என்பதை தகுந்த இலக்கிய ஆய்வுகள் மூலமாக எடுத்துக்கூறினார்.

இந்த கருத்தரங்கம் மாணவர்களுக்கு பயனுள்ளதாகவும், அறிவு சார்ந்ததாகவும் அமைந்தது. உதவிப் பேராசிரியர் சாந்தா கிறிஸ்டினா நன்றி கூறினார். 3-ம் ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை முதல் மற்றும் 2-ம் ஆண்டு மாணவர்கள் 64 பேர் இதில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News