உள்ளூர் செய்திகள்

மாவட்ட அளவிலான பண்பாட்டு போட்டிகள்

Published On 2022-10-25 08:12 GMT   |   Update On 2022-10-25 08:12 GMT
  • ராஜபாளையத்தில் மாவட்ட அளவிலான பண்பாட்டுப் போட்டிகள் நடந்தன.
  • அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

ராஜபாளையம்

ராஜபாளையம் விவேகானந்த கேந்திரமும், என்.ஏ. ராமச்சந்திரராஜா அறக்கட்டளையின் சார்பில் இயங்கும் விவேகானந்த கேந்திர கிளையும் இணைந்து விருதுநகர் மாவட்ட அளவிலான நகர்ப்புறப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான பண்பாட்டுப்போட்டிகளை அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் நடத்தியது. கேந்திர கிளை தலைவர் என்.ஆர்.கிருஷ்ணமூர்த்திராஜா தலைமை தாங்கினார். ராமச்சந்திரராஜா குருகுல தாளாளர் மஞ்சுளா கிருஷ்ணமூர்த்திராஜா குத்து விளக்கேற்றி போட்டிகளை தொடங்கி வைத்தார். கிளை பொருளாளரும். தலைமையாசிரியருமான ரமேஷ் வரவேற்றார். விவேகானந்த கேந்திர மாவட்ட பொறுப்பாளர் பேச்சியப்பன் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புவரை மாணவர்களுக்கு ஒப்பித்தல், பேச்சு, ஓவியம், நினைவாற்றல், இசை, வினாடி-வினா போட்டிகளின் விவரங்களை கூறி நடுவர்களை அறிமுகப்படுத்தினார்.

இதில் 32 பள்ளிகளில் இருந்து 350 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. மஞ்சம்மாள் தொழில்நுட்பக் கல்லூரி இயக்குநர் கே.ஆர்.விஸ்வநாதன், தங்கமயில் ஜூவல்லரி மேலாளர் பாலாஜி, பாபு ஆகியோர் மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கினர். முதலிடம் பிடித்த மாணவர்கள் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் அடுத்த மாதம் (நவம்பர்) நடைபெறவிருக்கும் 2 நாள் முகாமில் கலந்துகொண்டு மாநில அளவில் நடைபெறவிருக்கும் போட்டிகளில் கலந்து கொள்கிறார்கள். அறக்கட்டளை உறுப்பினர்கள் என்.கே.ராம்விஷ்ணு ராஜா, ராகஜோதி, என்.கே.ராம்வெங்கட் ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர். கிளை செயலர் மாரியப்பன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News