உள்ளூர் செய்திகள்

வேதியியல் துறை சிறப்பு சொற்பொழிவு

Published On 2023-03-15 08:46 GMT   |   Update On 2023-03-15 08:46 GMT
  • வேதியியல் துறை சிறப்பு சொற்பொழிவு நடந்தது.
  • தடயவியல் துறை இளநிலை அறிவியல் அதிகாரி காளிசுவரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

சிவகாசி

சிவகாசி காளீஸ்வரி கல்லூரி வேதியியல் துறையின் சார்பில் "வேதியியல் துறையில் வேலைவாய்ப்பு பற்றிய விழிப்புணர்வு" என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது. முதல்வர் பாலமுருகன், வேதியியல் துறை மூத்த பேராசிரியர் எஸ்.அழகப்பன் ஆகியோர் பங்கேற்றனர். தமிழக அரசின் தடயவியல் துறை இளநிலை அறிவியல் அதிகாரி காளிசுவரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அவர் பேசுகையில், மத்திய, மாநில அரசு நடத்தும் போட்டித் தேர்வுகள் பற்றியும், அதற்கு மாணவர்கள் தங்களை எவ்வாறு தயார்படுத்தி கொள்ள வேண்டும்? என்பது பற்றியும் எடுத்துரைத்தார். போட்டித் தேர்வு பற்றிய செய்திகளை தொலைத் தொடர்பு ஊடகம், செய்திதாள் மற்றும் இணையதளம் மூலம் எவ்வாறு தெரிந்து கொள்வது? என்றும் எடுத்து கூறினார். இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு வேதியியல் துறை வேலைவாய்ப்பு பற்றியும் விளக்கினார்.

முதுநிலை முதலாமாண்டு மாணவி ஷர்மிளா நன்றி கூறினார்.

Tags:    

Similar News