உள்ளூர் செய்திகள்

காளீஸ்வரி கல்லூரியில் கலாச்சார போட்டிகள்

Published On 2023-02-21 09:56 GMT   |   Update On 2023-02-21 09:56 GMT
  • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் கலாச்சார போட்டிகள் நடந்தது.
  • வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை முதல்வர் வழங்கினார்.

சிவகாசி

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் ஆங்கிலத் துறை இலக்கிய மன்றமும், ஆங்கிலத்துறையின் முன்னாள் மாணவர்களும் இணைந்து இந்திய கலாச்சார பாரம்பரியத்தை சிறப்பிக்கும் வகையில் கலாச்சார போட்டிகளை நடத்தியது. முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.

ஆங்கிலத்துறையின் முன்னாள் மாணவர்களான திண்டுக்கல் காந்தி கிராமிய பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர் கோகுலஹரி, சிவகாசி விஸ்டம் வெல்த் சர்வதேச பள்ளி நிர்வாக அதிகாரி முத்துக்குமார், புகைப்பட மற்றும் காணொளி வடிவமைப்பாளர் வித்யஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டனர்.

கலாச்சார சமையல், வண்ண சுவரொட்டி தயாரித்தல், ரங்கோலி, குறும்படம். மாறுவேடப் போட்டிகள் நடந்தன. நடுவர்களாக முன்னாள் செயல்பட்டனர். 108 இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் 4 அணிகளாகப் பிரிந்து இந்த போட்டிகளில் பங்கேற்றனர். முதல்நிலை வெற்றியாளர்களுக்கான கோப்பையை கிளடியேட்டர்கள் என்ற அணி வென்றது.

வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை முதல்வர் வழங்கினார். ஆங்கிலத்துறை தலைவர் பெமினா வரவேற்றார். ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் சாந்தா கிறிஸ்டினா நன்றி கூறினார். முதுகலை ஆங்கில ஆசிரியர் புவனா, ஆங்கில மொழி பயிற்றுநர் ஹரிஹரன் ஆகியோர் முன்னாள் மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்றவர்களை ஊக்கப்படுத்தினர்.

Tags:    

Similar News