உள்ளூர் செய்திகள்

வாக்காளர் பட்டியல் திருத்த ஆலோசனை கூட்டங்கள் விருதுநகர், சிவகங்கையில் நடந்தது.

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி ஆலோசனை கூட்டம்

Published On 2023-11-04 07:58 GMT   |   Update On 2023-11-04 09:10 GMT
  • விருதுநகர், சிவகங்கையில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி ஆலோசனை கூட்டம் நடந்தது.
  • வாக்குச்சாவடி நிலை அலுவர்கள் மூலமாக நேரடியாகவும், இணையதள வழியாகவும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்

விருதுநகர், சிவகங்கையில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தொடர்பாக கண்காணிப்பு அலுவலர் மற்றும் வேலை வாய்ப்பு, பயிற்சித் துறை ஆணையாளர் சுந்தரவல்லி தலைமையில் அங்கீக ரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டங்கள் நடந்தது.

விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கலெக்டர் ஜெயசீலன் முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக 4,5,18,19-ந் தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களின் போது கடைபிடிக்கப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்தும், இரட்டைப் பதிவுகளை நீக்கம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும், வாக்காளர் பட்டியலில் 18 வயது பூர்த்தியான எவரும் விடுபட்டு விடக்கூடாது எனவும், மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் எனவும் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளரால் எடுத்துரைக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கலெக்டர் ஆஷா அஜித் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்களில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவர்கள் மூலமாக நேரடியாகவும் மற்றும் இணையதள வழியாகவும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News