ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க.வினர்.
- தனியார் மதுபான கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழங்கங்களை எழுப்பினர்.
சிவகாசி
சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பராசக்தி காலனி பகுதியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஏராளமானோர் கூலி தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த பகுதியில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் தனியார் மதுபானகடை அமைய ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், குடியிருப்பு பகுதியில் மன மகிழ் மன்றம் என்ற பெயரில் தனியார் மதுபானகடை அமைக்க மாநகராட்சி நிர்வாகமும், தமிழக அரசாங்கமும் அனுமதி அளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி பா.ஜ.க.வினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழங்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் சுரேஷ், திருத்தங்கல் கலையரசன், பாட்டக்கு ளம் பழனிச்சாமி, வழக்க றிஞர்பாலசுப்பிரமணியம், ஆறுமுகசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.