உள்ளூர் செய்திகள்

உடைக்கப்பட்ட ஏ.டி.எம்.

ஏ,டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

Published On 2022-07-18 14:16 IST   |   Update On 2022-07-18 14:16:00 IST
  • ராஜபாளையத்தில் ஏ,டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
  • அந்தப்பகுதி மக்கள் ராஜபாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள சத்திரப்பட்டி சாலையில் கனரா வங்கி ஏ.டி.எம். உள்ளது. நேற்று நள்ளிரவு ஆள் நடமாட்டம் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் ஏ.டி.எம். மையத்திற்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் கடப்பாரை, கம்பி, போன்றவற்றை பயன்படுத்தி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தனர். அப்போது ஏ.டி.எம். மையத்தின் பொறுத்தப்பட்டிருந்த அலாரம் பயங்கர சத்தத்துடன் ஒலித்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மர்மநபர்கள் கொள்ளை முயற்சியை பாதியிலேயே கைவிட்டு,விட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

இன்று காலை ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ராஜபாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கொள்ளையர்கள் விட்டு சென்ற கம்பி, கடப்பாறை உள்ளிட் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை முயற்சி நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

உடைக்கப்பட்ட ஏ.டி.எம்.மில் பணம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News