நரிக்குடி அருகே உள்ள கணையமறித்தான் கிராமத்தில் கட்டப்பட்ட கலையரங்கத்தை அமைச்சர் தங்கம்தென்னரசு திறந்து வைத்தார். அருகில் கலெக்டர் மேகநாத ரெட்டி உள்ளார்.
- நரிக்குடி அருகே கலையரங்கம், பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது.
- இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் இந்திராநகர், கணையமறித்தான் மற்றும் கட்டனூர் ஆகிய பகுதிகளில் ரூ.18 லட்சம் மதிப்பில், கலையரங்கம் மற்றும் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது.
கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமை தாங்கினார். அமைச்சர் தங்கம் தென்னரசு, கலையரங்கம் மற்றும் பயணிகள் நிழற்குடையை பொதுமக்கள் பயன்பாட்டி ற்காக திறந்து வைத்தார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கல்யாணகுமார், திருச்சுழி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பொன்னுசாமி, மாவட்ட கவுன்சிலர்கள் கமலி பாரதி, பாப்பா போஸ், தங்க தமிழ்வாணன், காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.