உள்ளூர் செய்திகள்

மது போதையில் மோதல்; 6 பேர் மீது வழக்கு

Published On 2023-02-20 13:55 IST   |   Update On 2023-02-20 13:55:00 IST
  • மது போதையில் மோதல்; 6 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
  • அவர்களை தாக்கிய 6 பேரை தேடி வருகிறார்.

ராஜபாளையம்,

ராஜபாளையம் ரெயில்வே பீடர் ரோடு பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலைத்தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் கீழ் உள்ள அறையில் விருதுநகர் கண்மாய்பட்டியை சேர்ந்த அஜய்(வயது23) சந்துரு(30) உள்பட 7 பேர் தங்கி பெயிண்டிங் பணிகளை செய்து வருகின்றனர்.

சம்பவத்தன்று அஜய், சந்துரு இருவரும் இரவு சாப்பாடு மற்றும் மது வாங்கி கொண்டு தொட்டியின் எதிரில் உள்ள பொட்டல் பகுதியில் அமர்ந்து சாப்பிட்டனர்.

அங்கு ஏற்கனவே ராஜ பாளையத்தை சேர்ந்த சிலர் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது இருத ரப்பினருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

இதையடுத்து பெயிண்டர்கள் இருவரும் தப்பி தொட்டி அறைக்குள் சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் எதிர் தரப்பினர் கதவை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்தவர்களை தாக்கியுள்ளனர். தடுக்க வந்த நண்பர்களையும் தாக்கியுள்ளனர். சத்தம் கேட்டு காவலாளி வேகமாக வந்துள்ளனர். அவரை பார்த்ததும் தாக்கியவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இது குறித்து அஜய் ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிவு செய்து அவர்களை தாக்கிய 6 பேரை தேடி வருகிறார். 

Tags:    

Similar News