உள்ளூர் செய்திகள்

தலை அலங்காரத்துடன் கூடிய ஆண் உருவ சூடுமண் கண்டெடுப்பு

Published On 2023-07-11 08:24 GMT   |   Update On 2023-07-11 08:24 GMT
  • தலை அலங்காரத்துடன் கூடிய ஆண் உருவ சூடுமண் கண்டெடுக்கப்பட்டது.
  • தற்போது 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி நடந்து வருகிறது.

சிவகாசி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் முதற் கட்ட அகழாய்வின் போது பண்டைய கால பொருட்கள் கிடைத்தது. இதை தொடர்ந்து தற்போது 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி நடந்து வருகிறது.

இந்த அகழாய்வில் இது வரை தங்க அணிகலன், தங்க பட்டை, சுடு மண்ணால் ஆன பொம்மை, சுடுமண் அகல் விளக்கு, காதணி, எடைக்கல், பதக்கம், கண் ணாடி மணிகள், வணிக முத்திரை, சங்கு வளையல் கள், யானை தந்ததால் ஆன பகடை, தக்களி, செங்கல், சில்லு வட்டம் உள்ளிட்ட ஏராளமான தொல் பொருட்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. இந்நிலையில் ஆண் உருவ சுடுமண் பொம்மை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. கருப்பு நிறத்துடன் வனை யப்பட்டுள்ள இப்பொம்மை தலை அலங்காரமும் உதட்டுச் சிரிப்பும் மெரு கூட்டுகிறது.

கயல் வடிவில் கண்களும் அவற்றின் புருவங்களும் கீறல் வடிவில் வரையப்பட்டுள் ளன. வாய், மூக்கு, காதுகள் தடிமனாக உருவாக்கப் பட்டுள்ளன. இவ்வுருவம் 2.28 செ.மீ உயரமும் 2.15 செ.மீ அகலமும் 1.79 செ.மீ தடிமனும் கொண்டுள்ளது. அகழாய்வுக்குழியில் 40 செ. மீட்டர் ஆழத்தில் கிடைக்க பெற்ற இந்த ஆண் உருவ சுடுமண் பொம்மை வரலாற் றுக்காலத்தைச் சார்ந்ததாக கருதப்படுகிறது.

Tags:    

Similar News