உள்ளூர் செய்திகள்

ராம்கோ நிதி நிறுவனம் சார்பில் வனத்துறையிடம் ரூ.75 லட்சத்துக்கான வரைவோலை வழங்கப்பட்டது.

சாம்பல் நிற அணில்கள் சரணாலய அபிவிருத்திக்கு ரூ.75 லட்சம் நிதியுதவி

Published On 2023-09-22 06:51 GMT   |   Update On 2023-09-22 06:51 GMT
  • சாம்பல் நிற அணில்கள் சரணாலய அபிவிருத்திக்கு ரூ.75 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
  • ராம்கோ மூத்த மேலாளர் (நிலவியல்) சண்முகம் மற்றும் ராம்கோ மக்கள் தொடர்பு அலுவலர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம், துணை இயக்குனர் அலுவலகத்தில் ராம்கோ சமூக கூட்டாண்மை சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் சாம்பல் நிற அணில் வன உயிரின சரணாலய அபிவிருத்தி மற்றும் மயில்கள் பாது காப்பு அபிவிருத்திக்காக ராம்கோ நிறுவனம் சார்பில் ரூ.75 லட்சத்திற்கான வரை வோலை ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக கண்காணிப்பாளரிடம் வழங்கப்பட்டது.

ராம்கோ நிறுவனம் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு சமூக பொறுப்பு நிதியின் கீழ் நிதி வழங்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் சாம்பல் நிற அணில்கள் மற்றும் மயில்கள் பாதுகாப்பு அபிவிருத்திக்கு ரூ.75 லட்சம் ராம்கோசிமெண்ட் நிறுவனத்தின் சார்பில் சமூக கூட்டாண்மை சுற்றுச் சூழல் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் நிதி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வரை வோலையை நிறுவனத்தின் மூத்த பொது மேலாளர் (பணிகள்) கண்ணன், மூத்த துணை பொதுமேலாளர், (சுரங்கம்) சரவணன் ஆகியோர் திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக கண்காணிப்பாளர் பெரிய கருப்பனிடம் வழங்கினார். அருகில் வனச்சரக அலுவலர் செல்லமணி, உயிரியிலாளர் பார்த்தீபன், ராம்கோ மூத்த மேலாளர் (நிலவியல்) சண்முகம் மற்றும் ராம்கோ மக்கள் தொடர்பு அலுவலர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News