ஊத்தங்கரையில் விற்பனைக்கு தயாராகி வரும் விநாயகர் சிலைகள்
- 150-க்கும் மேற்பட்ட வகையான விநா–யகர் சிலைகள் தயாரிக்கப்–பட்டு உள்ளன.
- மாசுபடாத வண்ணம் கிழங்கு மாவுகளிலும், அட்டைக0ள் மூலம் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படு–கின்றன.
ஊத்தங்கரை,
விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந் தேதி நாடு முழுவதும் பொதுமக்கள் கொண்டாட இருக்கின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை-திருப்பத்தூர் சாலையில் உள்ள அப்பி–நாயக்கன்பட்டி கிராமத்தில் பல்வேறு வண்ணங்களில் விநாயகர் சிலைகள் தயா–ரிக்கப்பட்டு வருகின்றன,
அனுமான், பிள்ளையார் பட்டி கருப்பு, ஜல்லிக்கட்டு காளை, திரிசூலம், சிங்க–வால், யானைப் போல், ரதம், மயில்வாகனம் போன்ற 150-க்கும் மேற்பட்ட வகையான விநா–யகர் சிலைகள் தயாரிக்கப்–பட்டு உள்ளன. இந்த விநாயகர் சிலைகளை தருமபுரி, திருப்பத்தூர், அரூர், திருவண்ணாமலை, குப்பம் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான இளைஞர்கள் வந்து விநாயகர் சிலைகளை வாங்கிச் செல்கின்றனர்.
இது குறித்து விநாயகர் சிலைகளை தயாரிப்பவர் கூறும்போது:--
ஊத்தங்கரை பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் நாங்–கள் ஈடுபட்டு வருகின்றோம். எங்களிடம் தயாரிக்கப்படும் இந்த விநாயகர் சிலைகள், முழுக்க முழுக்க சுற்றுச்சூழல் மாசுபடாத வண்ணம் கிழங்கு மாவுகளிலும், அட்டைகள் மூலம் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன.
இது ஆறு மற்றும் ஏரியில் கரைக்கும் பொழுது மீன்க–ளுக்கு உணவாக இது மாறு–கின்றன. அந்த உயிரினங்க–ளுக்கு எந்த பாதிப்பில்லாத வகையில் இந்த சிலைகள் உள்ளன என்பது குறிப்பிடத்–தக்கது. கடந்த ஆண்டு மழை காரணமாக சிறிது மந்தமான நிலையில் வியாபாரம் நடைபெற்றாலும், இந்த ஆண்டு அதிகளவு விநாயகர் சிலைகள் தற்போது விற்பனையாகி வருகின்றன என்றார்.