உள்ளூர் செய்திகள்

மாநாட்டில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

கிராம உதவியாளர் காலி பணியிடங்கள் தேர்வு ஆணையம் மூலம் நிரப்ப வேண்டும்- அரசு ஊழியர்கள் வலியுறுத்தல்

Published On 2022-08-07 12:07 IST   |   Update On 2022-08-07 12:07:00 IST
  • கிராம நிர்வாக பதவி உயர்வை 10 ஆண்டுகள் என்பதை 6 ஆண்டுகளாக குறைக்க வேண்டும்.
  • பதவி உயர்வு வருகின்றபோது வயதை கணக்கிட்டு பதவி உயர்வு வழங்க வேண்டும்.

பாலக்கோடு,

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்க 2-வது வட்ட மாநாடு சிவக்குமார் வட்டத் தலைவர் தலைமையில் நடைபெற்றது.

இதில் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், பழைய முறையிலான ஓய்வூதியம், கிராம நிர்வாக பதவி உயர்வை 10 ஆண்டுகள் என்பதை 6 ஆண்டுகளாக குறைக்க வேண்டும்.

20 சதவீத விழுக்காடு என்பதை 30 சதவீத விழுக்காடாக உயர்த்த வேண்டும். கிராம உதவியாளர் காலி பணியிடங்கள் தேர்வு ஆணையம் மூலம் நிரப்ப வேண்டும். ஓட்டுநர் பதிவு உயர்வு வழங்க வேண்டும்.

1.6.1995 முன்பு பணி பார்த்த காலத்தில் பணிக்காலமாக கருதி ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும். பதவி உயர்வு வருகின்றபோது வயதை கணக்கிட்டு பதவி உயர்வு வழங்க வேண்டும்.

கிராம உதவியாளர்களை கிராம பணியை தவிர இதர பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் முன்னிலை வட்டச் செயலாளர் கோபிநாத், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வேணுகோபால், செல்வகுமார், மாநில துணைத்தலைவர் சிவசங்கர், மாவட்ட துணை தலைவர் வடிவேல், சிறப்புரை பசுவராஜ், ரங்கன் மற்றும் அன்பழகன் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News