வேப்பனப்பள்ளி் மளிகை கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்ற 2 பேர் கைது
- தனிப்படை போலீசார் கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
- சீனிவாசகவுடு ஸ்ரீநாத் (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் சிறப்பு தனிப்படை போலீசார் கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வேப்ப னப்பள்ளியில் குப்பம் ரோடு செல்லும் சாலையில் உள்ள மளிகை கடையில் சோதனை செய்தபோது மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து கடையில் குட்கா பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த சின்னபொம்மரசனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசகவுடு ஸ்ரீநாத் (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அதே பகுதியில் மற்றொரு மளிகை கடையில் குட்கா பொருள்களை கைப்பற்றிய போலீசார் அந்த கடையின் உரிமையாளர் அரியனபள்ளி கிராமத்தை சேர்ந்த நஞ்சேகவுடு மகன் முரளி (40) என்பவரை கைது செய்தனர். இருவரிடம் இருந்தும் சுமார் 4 கிலோ மதிப்புள்ள குட்கா பொருட்களை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.