உள்ளூர் செய்திகள்

ராஜகோபாலசாமி மீது பக்தர்கள் வெண்ணெய் அடித்து வழிபட்டனர். (சிறப்பு அலங்காரத்தில் ராஜகோபாலசாமி)

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் வெண்ணைத்தாழி உற்சவம்

Published On 2023-03-26 10:01 GMT   |   Update On 2023-03-26 10:01 GMT
  • பங்குனி திருவிழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  • தங்க கருடா வாகனத்தில் இரட்டை குடை சேவை 22-ந்தேதியும் நடைபெற்றது.

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. இக்கோவில் புகழ்பெற்ற வைணவ தலங்களில் ஒன்றாகும். இக்கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மாத திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து, விழாவில் தங்க சூரிய பிரபை 20-ந்தேதியும், தங்க கருடா வாகனத்தில் இரட்டை குடை சேவை 22-ந்தேதியும் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான வெண்ணைத்தாழி உற்சவம் இன்று காலை நடைபெற்றது. இதில் நவநீத கோலத்தில் காட்சியளித்த ராஜகோபாலசாமி மீது பக்தர்கள் வெண்ணெய் அடித்து வழிபட்டனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News