உள்ளூர் செய்திகள்
- காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை நிறுத்தம்
- செயற்பொறியாளர் தகவல்
வேலூர்:
வேலூர், இறைவன்காடு பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது என வேலூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் நடராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வேலூர், இறைவன்காடு துணை மின்நிலையங்களில் அத்தியாவசிய மின் பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, நாளை காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை புதிய பேருந்து நிலையம், பைபாஸ் ரோடு, தோட்டப்பாளையம், பழைய பஸ் நிலையம், வேலூர் மாநகரம், பஜார், சலவன்பேட்டை, அண்ணாசாலை, கஸ்பா, ஊசூர், கொணவட்டம், சேண்பாக்கம், வல்லண்டராம், விரிஞ்சிபுரம், செதுவாலை, கந்தனேரி, மருதவள்ளி பாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது" என தெரிவித்துள்ளார்.