சுவர் இடிந்து விழுந்த ஓட்டலில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்த காட்சி.
சுவர் இடிந்து 2 பேர் பலியான ஓட்டலில் கலெக்டர் ஆய்வு
- வருவாய் துறையினர் சீல் வைத்தனர்
- உயிர்பலி ஏற்படுத்திய சுவரை அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
வேலூர்:
வேலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள தனியார் ஓட்டலில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக சுவர் ஈரமாக இருந்தது. நேற்று முன்தினம் இரவு சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இதனை அப்புறப்படுத்த நிர்வாகம் முடிவு செய்தது.
வேலூர் சலவன்பேட்டை ராமமூர்த்தி (வயது 50 ) என்ற கட்டிட மேஸ்திரி. கருகம்புத்தூரை சேர்ந்த வெண்ணிலா உள்பட 2 பெண்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து விழுந்தது. இதில் ராமமூர்த்தி வெண்ணிலா உள்பட 3 பேரும் சிக்கி காயம் அடைந்தனர்.
அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டனர். 3 பேரும் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர் .அங்கு பரிசோதனை செய்த டாக்டர் 3 பேரில் ஒரு பெண் இறந்து விட்டதாக தெரிவித்தார். அதன் பிறகு மற்ற இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் கட்டிடமேஸ்திரி ராமமூர்த்தியும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
தொடர்ந்து ஓட்டலுக்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இந்த நிலையில் இன்று காலை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் சம்பவம் நடந்த ஓட்டலுக்கு சென்று ஆய்வு செய்தார். தாசில்தார் செந்தில் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.
உயிர்பலி ஏற்படுத்திய சுவரை ஆய்வு செய்து அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.