உள்ளூர் செய்திகள்
கட்டிட வேலையின் போது தவறி விழுந்து மேஸ்திரி சாவு
- 2-வது மாடியில் இருந்து திடீரென கீழே விழுந்தார்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் அருகே உள்ள சாத்து மதுரையை சேர்ந்தவர் பரமசிவன் (வயது 48). கட்டிட மேஸ்திரி. இவர் வேலூர் சலவன்பேட்டையில் உள்ள ஒரு கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.அப்போது 2-வது மாடியில் இருந்து திடீரென தவறி கீழே விழுந்தார்.
அவரை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.