குடியாத்தம் தட்டப்பாறை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தொடங்கி வைத்தார்.
போதை பழக்கத்திற்கு எதிராக மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு
- குடியாத்தம் தட்டப்பாறை அரசு பள்ளியில் விழிப்புணர்வு
- எஸ்.பி. பங்கேற்று பேசினார்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தட்டப்பாறை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் போலீசார் சார்பில் போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மாணவர்கள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமை தாங்கினார்.தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி, சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார்கள் முன்னிலை வகித்தனர்.பள்ளி உதவி தலைமை ஆசிரியை சாந்தி வரவேற்றார். குடியாத்தம் உதவி கலெக்டர் எஸ்.தனஞ்செயன் போதைப் பழக்கத்தின் தீமைகள் குறித்து உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்தும் விரிவாக பேசினார்.
தொடர்ந்து போலீசார் மாணவர்கள் ஆசிரியர்கள் இணைந்து போதை பழக்கத்திற்கான எதிரான உறுதிமொழி எடுத்து கொண்டனர்.