உள்ளூர் செய்திகள்

மாதிரி தேர்தல் வாக்கு எண்ணிக்கை

Published On 2023-09-26 15:04 IST   |   Update On 2023-09-26 15:04:00 IST
  • ஊசூர் அரசு பள்ளியில் நடந்தது
  • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்

அணைக்கட்டு:

வேலூர் மாவட்டம், ஊசூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை சுமார் 270 மா ணவர்கள் படிக்கின்றனர்.

இதில் மாணவர்களின் தலைமைப் பண்பை வளர்க்கும் நோக்கத்திலும், இந்திய நாடாளுமன்ற அமைப்பு முறையை தெரிந்து கொள்ளும் வகையிலும் மாணவர்க ளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மாதிரி தேர்தல் நடத்தப்பட்டது. அதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த வாரம் நடந்ந்தது.

இதில் 12 மாணவர்கள் விருப்பப்பட்டு மனுதாக்கல் செய்தனர். போட்டியாளர்களுக்கு சின்னமும் ஒதுக்கப்பட்டு, பிரச்சாரங்களும் நடை ப்பெற்றன. கண்கண்ணாடி, ஆட்டோ, கிரிக்கெட் மட்டை, தொப்பி, சீப்பு உள்ளிட்ட சின்னங்கள் இடம் பெற்றிருந்தது. மாணவர்கள் போட்டி போட்டுக் கொண்டு சக மாணவர்களிடம் தங்களுக்கான வாக்குகளை ஆர்வத்துடன் சேகரித்தனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த 23-ந் தேதி பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையில் நின்று ஓட்டு போட்டனர்.

100 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில் வாக்கு பெட்டிகளை பாதுகாப்பாக பள்ளியில் வைத்து பூட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நேற்று மதியம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. போட்டியில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் அமைச்சரவை எப்படி அமைப்பது என்பது குறித்து பள்ளி மாணவர்களுக்கிடையே விழிப்புணர் ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் சுற்றுப்புற தூய்மை, சுற்றுச்சூழல், இறைவணக்க கூட்டம், கழிவறை பராமரிப்பு பணிகளை கண்காணித்தல், காலை உணவு மற்றும் மதிய உணவுகளை அளித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு தலை வராக நியமிக்கப்ப ட்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியை சோபனா, பட்டதாரி ஆசிரியை ரமாதேவி, ஆசிரியர்கள் ரோஸ்லின், சிவகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News