உள்ளூர் செய்திகள்

சதுப்பேரி ஏரியில் விநாயகர் சிலை கொண்டு செல்லும் பாதைகள் பொக்லைன் மூலம் சீரமைக்கப்பட்ட காட்சி.

விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் பாதைகள் சீரமைப்பு

Published On 2022-09-01 09:25 GMT   |   Update On 2022-09-01 09:25 GMT
  • தற்காலிக சாலைகள் அமைக்கும் பணி தீவிரம்
  • சதுப்பேரி ஏரியில் சிலைகள் கரைக்கப்படுகிறது

வேலூர்:

வேலூரில் விநாயகர் சிலை ஊர்வலம் நாளை நடக்கிறது. நாளை மதியம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் தொடங்குகிறது.

காகிதப்பட்டறை, சைதாப்பேட்டை, மெயின் பஜார், லாங்கு பஜார், மூங்கில் மண்டி, அண்ணா கலையரங்கம் செல்கின்றன. அந்த இடத்தில் வேலூரில் இருந்து கொண்டு வரப்படும் சிலைகள் இணைகின்றன.

பின்னர் கோட்டை சுற்றுசாலை கொணவட்டம் வழியாக சதுப்பேரி ஏரிக்கு சிலைகள் கொண்டு செல்லப்பட்டு அங்கு கரைக்கப்படுகின்றன.

விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும் பாதைகளை மாநகராட்சி சார்பில் சீரமைத்து வருகின்றனர்.

பாதாள சாக்கடை பணிகள் நடந்து வரும் பகுதிகளில் தற்காலிகமாக விநாயகர் சிலைகள் கொண்டு செல்லும் வகையில் சாலைகள் அமைக்கும் பணிகள் இன்று நடந்தது.

Tags:    

Similar News