காட்பாடி ரெயில் நிலையத்தில் நடந்து வரும் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
- பயணிகள் மேம்பாட்டு குழு ஆய்வு
- ரூ.365 கோடியில் மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளது
வேலூர்:
தென்னக ரெயில்வேயின் சென்னை கோட்டத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ரெயில்வே சந்திப்பாக காட்பாடி ரெயில்வே சந்திப்பு உள்ளது. தினமும் இங்கு 120 ரெயில்கள் வரை நின்று செல்கின்றன. நாள்தோறும் 30 ஆயிரம் பயணிகள் வரை வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், நாட்டில் உள்ள ரெயில் நிலையங்களை அவற்றின் பழமை மாறாமல் சர்வதேச தரத்தில் மேம்படுத்த இந்திய ரெயில்வே திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக நாடு முழுவதும் 50 ரெயில் நிலை யங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இதில் சென்னை எழும்பூர், காட்பாடி, மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய 5 ரெயில் நிலையங்கள் அடங் கியுள்ளன. இதற்காக ரூ.1,800 கோடியில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இதில் காட்பாடி ரெயில் நிலையம் ரூ.365 கோடியில் மேம்படுத்தப்படுகிறது. ரெயில் நிலையத்தின் தற்போதைய முகப்பு தோற்றம் முற்றிலும் மாறுகிறது. ரெயில் நிலையம் வேலூர் சித்தூர் சாலையின் இருபுறமும் பொதுமக்கள் இந்த சாலையை கடப்பதை தவிர்க்கும் வகையில் அமைகிறது. அதற்கேற்ப சாலை வசதியும் செய்யப்பட உள்ளது.
தற்போதுள்ள 5 பிளாட் பாரங்களுடன் கூடுதலாக 2 புதிய பிளாட்பாரங்கள் நவீன முறையில் அமைகிறது. மேலும் பயணிகள் பிளாட்பாரங்களுக்கு செல்லும் இப்போதுள்ள நடைமேம்பாலத்துடன், மற்றொரு நடைமேம்பாலம் கூடுதலாக அமையும் 2 பிளாட்பாரங்களுடன் சேர்த்து 7 பிளாட்பாரங்களுக்கும் செல்லும் வகையில் அமைக்கப்படுகிறது. அதேபோல் சரக்கு ரெயிலுக்கான ஒரு பிளாட்பாரம் நவீனமாக மாற்றப்படுகிறது.
இத்திட்டத்துக்கான அடிக்கல்லை பிரதமர் மோடி மே மாதம் தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் தென்னக ரெயில்வே கமிட்டி சேர்மன் பி.கே.கிருஷ்ண தாஸ் தலைமையில் 9பேர் கொண்ட குழுவினர் டபுள்டெக்கர் ரெயில் மூலம் நேற்று காட்பாடி ரெயில் நிலையம் வந்தனர்.
இங்கு அனைத்து பிளாட்பாரங் கள், பயணிகள் தங்கும் அறை, கழிவறை, பார்க் கிங் வசதி, டிக்கெட் புக்கிங் வசதி, ரெயில்வே உணவகம், குழந்தைகளுக்கான உதவி மையம், சிசிடிவி கேமராக்கள், அவற்றின் கட்டுப்பாட்டு அறை, ரெயில்வே பாதுகாப்புப்படை ஸ்டேஷன், லிப்ட் வசதி, நகரும் படிக்கட்டு வசதிகளை ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து ரெயில் நிலைய அதிகாரிகள், பொறியாளர்களிடம் ரெயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரூ.365 மதிப்பிலான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்' என்று வலியுறுத்தினர்.