உள்ளூர் செய்திகள்

மண்புழு உரம் தயாரிக்கும் பணியை அதிகாரி ஆய்வு செய்த போது எடுத்த படம்.

மண்புழு உரம் தயாரிக்கும் பணியை அதிகாரி ஆய்வு

Published On 2023-08-27 14:20 IST   |   Update On 2023-08-27 14:20:00 IST
  • ரூ.10,000 கடன் உதவி வழங்க தகுதியான நபர்களை தேர்வு செய்ய வேண்டும்.
  • 67 நபர்களுக்கு சுயநிதி பெற்று கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்

அணைக்கட்டு:

வேலூர் அடுத்த பென்னாத்தூர் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் மண்புழு உரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதனை பேரூராட்சிகளின் மண்டல உதவி இயக்குனர் செ.கணேஷ் நேற்று திடீரென பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் ஆவணங்கள், திட்டப் பணிகளின் விவரம், முன்னேற்ற நிலை குறித்து செயல் அலுவலரிடம் கேட்டறிந்தார்.

மேலும் வரி மற்றும் வரியற்ற இனங்களின் வசூல் விவரம் குறித்து ஆய்வு செய்து, வரி வசூல் பணியினை நிலுவையின்றி விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

சாலையோரத்தில் கடை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு பி.எம். சுயநிதி திட்டத்தின்கீழ் வங்கி மூலம் ரூ.10,000 கடன் உதவி வழங்க தகுதியான நபர்களை தேர்வு செய்ய வேண்டும்.

வருகிற 30-ந் தேதிக்குள் 67 நபர்களுக்கு சுயநிதி பெற்று கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

ஆய்வின் போது பென்னாத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் கி.அர்ச்சுனன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News