உள்ளூர் செய்திகள்

மீன்கள் வாங்க இன்று குவிந்த பொதுமக்களை படத்தில் காணலாம்.

வேலூர் மீன் மார்க்கெட்டில் மீன்கள் விலை குறைந்ததால் அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி

Published On 2023-09-03 14:23 IST   |   Update On 2023-09-03 14:23:00 IST
  • 50 டன் வரை மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன
  • மீன்களின் வரத்து அதிகரித்தது

வேலூர்:

வேலூர் மீன் மார்க் கெட்டுக்கு தமிழகத்தின் நாகப்பட்டினம், மங்களூரு, கோழிக்கோடு, கார்வார் போன்றஇடங்களில் இருந்து மீன் இறக்குமதி செய்யபடுகிறது.

வேலூர் புதிய மீன் மார்க்கெட்டில் நள்ளிரவு 2 மணிக்கு மேல் மீன் மொத்த வியாபாரமும், காலை 6 மணிக்கு மேல் சில்லறை வியாபாரமும் நடை பெறுகிறது.

திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள் ஒன்றுக்கு 50 டன் வரை மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

ஞாயிற்றுக் கிழமையில் மட்டும் 50 முதல் 70 டன் மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. காலை முதல் இரவு வரை சில்லறை விற்பனை நடக்கிறது.

இந்த நிலையில் வேலூர் மீன் மார்கெட்டில் கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் மீன்களின் விலை யில் சரிவு காணப்பட்டது. அதன்படி, இன்று வஞ்சிரம் கிலோ ரூ.900 முதல் 1,200 வரையும், சின்ன வஞ்சிரம் ரூ.400 முதல் ரூ.500 வரையும் விற்றது. சீலா கிலோ ரூ.350, தேங்காய்பாறைகிலோ ரூ.450. இறால் கிலோ 350 முதல் ரூ.550 வரையும், நண்டு கிலோ ரூ.400 வரையும் விற்றது. சங்கரா ரூ.150 முதல் ரூ.300-க்கும், நெத்திலி 200-க்கும், கட்லா 120-க்கும், மத்தி ரூ.120-க்கும். மத்தி 7140, வவ்வால் ரூ.450க்கும், டேம்வவ் வால் ரூ.150க்கும், அயிலா ரூ.180-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

கடந்த வாரத்தை விட இந்த வாரம் 4 லோடு மீன்களின் வரத்து அதிகரிப்பால், மீன்களின் விலையும் கணிசமாக குறைந்துள்ள தாக வியாபாரிகள் தெரி வித்தனர். விலை குறை வால் அசைவப்பிரியர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News