உள்ளூர் செய்திகள்

காதலர் தினத்தையொட்டி வேலூர் கோட்டை நுழைவு வாயிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள காட்சி.

வேலூர் கோட்டையில் காதல் ஜோடிகளுக்கு அனுமதி மறுப்பு

Published On 2023-02-14 15:10 IST   |   Update On 2023-02-14 15:10:00 IST
  • காதலர் தினத்தில் குவிந்தனர்
  • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

வேலூர்:

காதலர் தினத்தையொட்டி காதலர்கள் பரிசு பொருட்கள், வாழ்த்து அட்டையை ஒருவருக்கொருவர் வழங்கி தங்களின் அன்பை பரிமாறிக்கொண்டனர்.

மேலும் அவர்கள் தங்களுக்கு பிடித்த இடங்களுக்கு சென்று காதலர் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். வேலூரில் காதலர் தினத்தையொட்டி பரிசு பொருட்கள், வாழ்த்து அட்டை, ரோஜாப்பூக்களின் விற்பனை அதிகமாக காணப்பட்டது.

வேலூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் வேலூர் கோட்டைக்கு காதலர் தினத்தையொட்டி ஏராளமான காதல் ஜோடிகள் வந்தனர். கோட்டை மற்றும் கோட்டை யின் முன்பகுதியில் உள்ள பூங்காவில் காதல் ஜோடியினர் ஆங்காங்கே அமர்ந்திருந்தனர்.

கோட்டை பூங்கா மற்றும் கொத்தளத்தில் ஜோடிகள் அத்துமீறல்களை தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பூங்காவில் இருந்த காதல் ஜோடிகளை போலீசார் விரட்டி அடித்தனர்.

இதேபோல கோட்டை நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் காதல் ஜோடிகளை திருப்பி அனுப்பினர்.

கோட்டைக்குள் செல்ல காதல் ஜோடிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இருசக்கர வாகனங்களில் வந்த காதல் ஜோடிகளை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர்களில் பலர் அருங்காட்சியகம் மற்றும் கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றனர்.

Tags:    

Similar News