உள்ளூர் செய்திகள்

ஓடும் பஸ்சில் தான் ஏறுவோம் கல்லூரி மாணவர்கள் அடம் பிடித்ததால் நடுரோட்டில் பஸ் நிறுத்தம்

Published On 2023-09-09 15:27 IST   |   Update On 2023-09-09 15:27:00 IST
  • அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டது
  • கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

அணைக்கட்டு:

ஒடுகத்தூர் அடுத்த அகரம் அரசு கலைக் கல்லூரியில் சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

வேலூர், குடியாத்தம், பள்ளிகொண்டா, ஆம்பூர், ஒடுகத்தூர் உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து மாணவர்கள் வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று வழக்கம் போல் 3 மணி அளவில் கல்லூரி விடப்பட்டது. ஒடுகத்தூரில் இருந்து வேலூர் நோக்கி வந்த அரசு பஸ்சில் கல்லூரி மாணவர்கள் சில பேர் ஏறினர். சில பேர் ஓடும் பஸ்சில் தான் ஏறுவோம் என்று அடம்பிடித்து நின்றனர்.

இதனால் நீங்கள் பஸ்சில் ஏறினால் தான் நான் பஸ்சை எடுப்பேன் என்று டிரைவர் அடம்பிடித்து நிறுத்தினார். இதனால் அரை மணி நேரம் பஸ் எடுக்காமல் பயணிகள் அவதிப்பட்டனர்.

மேலும் கல்லூரி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் பேச்சுவார்த்தை நடத்தி அரை மணி நேரத்திற்கு பின்பு அனைத்து மாணவர்களும் பஸ்சில் ஏறிய பின்பு பஸ் புறப்பட்டு சென்றது.

நாள்தோறும் இவ்வாறாக அடம்பிடிக்கும் கல்லூரி மாணவர்கள் மீது பெற்றோர்களும், கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பயணிகள் வலியுறுத்தினர்.

Tags:    

Similar News