உள்ளூர் செய்திகள்

வேலூரில் நான் முதல்வன் மதிப்பீட்டு தேர்வு

Published On 2023-09-10 15:28 IST   |   Update On 2023-09-10 15:28:00 IST
  • 964 பேர் எழுதினார்
  • மின்னணு சாதனங்களை எடுத்து செல்ல ஆனுமதிக்கப்படவில்லை

வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் காட்பாடி யில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, டான்போஸ்கோ பள்ளி, ஆக்சிலியம் பள்ளி என 3 மையங்களில் நான் முதல்வர் மதிப்பீட்டு தேர்வு நடந்தது.

காலை 9 மணியளவில் தேர்வர்களை தீவிர சோதனைக்கு பிறகே போலீசார் தேர்வு மையத்திற்குள் அனுமதித்தனர்.

மொத்தம் 964 பேர் தேர்வை எழுதினர். மேலும், ஒவ்வொரு தேர்வுக் கூடத்திற்கும் பாதுகாப்பிற்கு ஒரு போலீசாரும், விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத சிறப்பு பஸ் வசதிகளும் செய்யப்பட்டிருந்தது.

விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கூடத்திற்கு பைகள், புத்தகங்கள் மற்றும் கைபேசி, கால்குலேட்டர், பேஜர், போன்ற மின்னணு சாதனங்களை எடுத்து செல்ல ஆனுமதிக்கப்படவில்லை.

Tags:    

Similar News