உள்ளூர் செய்திகள்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடந்த காட்சி.

உழவர் சந்தையில் குப்பைகளால் வியாபாரிகள் கடும் அவதி

Published On 2023-05-26 09:28 GMT   |   Update On 2023-05-26 09:28 GMT
  • குறைதீர்வு கூட்டத்தில் புகார்
  • மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் இன்று நடைபெற்றது

வேலூர்,

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமையில் இன்று நடந்தது.

கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் கலாநிதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நந்தகுமார், பயிற்சி ஏ டி எஸ் பி பிரசன்னா குமார் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் விவசாயிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

அப்போது விவசாயிகள் பேசியதாவது :-

கணியம்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட காட்டுப்புத்தூர் கிராமத்தில் உள்ள குளங்களுக்கு நீர் வரத்து கால்வாய்கள் தூர்ந்து போய் உள்ளது.

நீரை நம்பியே விவசாயம் செய்து வருகின்றனர். நீர் வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும்.

பெரிய கம்பத்தம் கிராமத்தில் ரேசன் கடை எப்போது திறக்கப்படுகிறது மூடப்படுகிறது என தெரியவில்லை.

கடை விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காட்பாடி உழவர் சந்தையில் இருந்து வெளியே வரும் பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளதால் விவசாயிகள் மற்றும் காய்கறி வாங்க வருபவர்கள் அவதி அடைகின்றனர்.

லத்தேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை விவசாயத்துக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.

வேளாண்மை விரிவாக்க மையங்களில் ஊதிய அளவு விதைகள் இருப்பு வைக்க வேண்டும் என தெரிவித்தனர்.

அதற்கு வேளாண்துறை அதிகாரிகள் கூறுகையில் நெல் கம்பு சோளம் சாமை துவரை உளுந்து பச்சை பயிறு காராமணி உள்ளிட்டவை 100 டன் வரை இருப்பு வைக்கப்பட்டுள்ளது விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி 50 சதவீத மானியத்தில் விதைகளை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்தனர்.

தொடர்ந்து பேசிய விவசாயிகள் ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வங்கிகளில் நகைக்கு கடன் தருகின்றனர் விவசாயத்திற்கு கடன் தர மறுக்கின்றனர்.

மாடு வாங்க வட்டியில்லா கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது தக்காளி குறைந்த விலைக்கு விற்பனையாவதால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைகின்றனர். எனவே தக்காளி பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என கூறினார்.

Tags:    

Similar News