உள்ளூர் செய்திகள்
150 மாணவர்களுக்கு இலவச குறு மேசைகள்
- பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக வழங்கப்பட்டது
- எளிய முறையில் படிக்க மற்றும் எழுதுவதற்கு உதவியாக இருக்கும் என்று தெரிவித்தனர்
அணைக்கட்டு:
அணைக்கட்டு அடுத்த பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட சூப்பர் மலை கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளிகள் இயங்கி வருகிறது. இப்பள்ளிகளில், 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், வருகையை அதிகப்படுத்தும் நோக்கில் 150 மாணவர்களுக்கு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் இலவசமாக குறு மேசைகள் வழங்கப்பட்டன.
இதன் மூலம் மாணவர்களுக்கு எளிய முறையில் படிக்க மற்றும் எழுதுவதற்கு உதவியாக இருக்கும் என்று ஆசிரியர்கள், பெற்றோர்கள் தெரிவித்தனர்.