உள்ளூர் செய்திகள்
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள்.
- வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்தது
- கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம் இன்று நடந்தது.
சத்துணவு ஊழியர்
போராட்டத்திற்கு மாவட்ட தலைவர்கள் சீனிவாசன், பியூலா எலிசபெத் ராணி, சேகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட அமைப்பு தலைவர் சரவண ராஜ், மாநில செயலாளர் மோகன மூர்த்தி, மாநில பொதுச் செயலாளர் ராஜாமணி, மாவட்ட அமைப்பு செயலாளர் வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் துவக்க உரையாற்றினர்.மாநில செயலாளர் ஜெயந்தி சிறப்பு உரையாற்றினார்
தர்ணாவில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.