உள்ளூர் செய்திகள்

வேலூர் லாங்கு பஜாரில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்த காட்சி.

போக்குவரத்து நெரிசல் குறித்து கலெக்டர் ஆய்வு

Published On 2022-11-25 15:16 IST   |   Update On 2022-11-25 15:16:00 IST
  • வேலூர் லாங்கு பஜார், மண்டி தெரு இருபுறமும் கடைகள் ஆக்கிரமித்துள்ளன
  • சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியனை அகற்ற முடிவு

வேலூர்:

வேலூர் மண்டி தெரு மற்றும் லாங்கு பஜாரில் இரண்டு பக்கமும் கடைகள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டு உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே லாங்கு பஜார் மற்றும் மண்டி தெருவில் நடுவில் உள்ள சென்டர் மீடியனை அகற்றுவது குறித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், டிஎஸ்பி திருநாவுக்கரசு மற்றும் போக்குவரத்து போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள தள்ளுவண்டி கடைகளை பழைய மீன் மார்க்கெட் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள இடத்திற்கு மாற்றம் செய்வது மற்றும் சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியனை அகற்றுவது என முடிவு செய்தனர்.

Tags:    

Similar News