மதமாற்றம் செய்ய முயன்ற கும்பலிடம் பா.ஜ.க. இந்து முன்னணியினர் வாக்குவாதம்
- நெற்றியில் குங்குமம் வைக்க முயன்றதால் பரபரப்பு
- போலீசார் கடும் எச்சரிக்கை
பள்ளிகொண்டா:
பள்ளிகொண்டா அடுத்த சின்னசேரி கிராமத் தில் நேற்று 15 பேர் கொண்ட ஒரு மத குழுவினர் வீடு வீடாக பைபிள் மற்றும் மதமாற்றம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி கொண்டிருந்தனர்.
இதனை அறிந்த பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணியினர் 50க்கும் மேற்பட்டோர் அந்த பகுதியில் குவிந்தனர்.
அவர்கள் நோட்டீஸ் வழங்கியவர்களிடம் நீங்கள் யார், எங்கிருந்து வருகின்றீர்கள் என்று கேட்டதற்கு பதில் ஏதும் கூறாமல் அவர்கள் வந்த காரில் புறப்பட்டு செல்ல முற்பட்டனர். உடனே, பாஜவை சேர்ந்தவர்கள் அந்த காரை தடுத்து நிறுத்தி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு வந்த பள்ளிகொண்டா போலீசார் வாக்குவாதத்தில் ஈடு பட்டவர்களை சமாதானம் செய்ய முயற்சி செய்தனர். அப்போது, பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணியினர் மத மாற்றம் செய்ய வந்தவர்களிடம் நாங்கள் இதுபோன்று உங்கள் இடத்தில் வந்து மதமாற்றம் செய்தால் ஒப் புக்கொள்வீர்களா இல்லை சும்மாதான் இருப்பீர்களா என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், அவர்களின் நெற்றியில் இந்து முறைப்படி குங்குமம் பொட்டு வைக்க சென்றதால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் முற்றியது. நிலைமை கட்டுக்குள் அடங்காமல் கைமீறி சென்றதால் உடனடியாக குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி, வேலூர் டிஎஸ்பி திருநாவுக்கரசு தலைமையில் அதிரடிப் படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இருதரப்பை அழைத்து சமாதான பேச்சுவர்த்தையில் ஈடுபட்டனர்.
பின்னர் நடத்திய விசாரணையில் பள்ளிகொண்டா அடுத்த கூத்தம்பாக்கத்தில் இருக்கும் ஒரு வழிபாட்டுத்தலத்திலிருந்து பரப்புரை நிகழ்த்துவதற்கு வந்ததாக 15 பேர் கொண்ட குழுவி னர் போலீசாரிடம் தெரி வித்தனர்.
மேலும், இனி இது போன்ற மற்றவர்களின் விருப்பத்திற்கு மாறான மதமாற்றம் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎஸ் பிக்கள் எச்சரிக்கை விடுத்து அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.