விஜய்யுடன் வேல்முருகன்
விஜய் பிறந்தநாளை முன்னிட்டு 1048 பேருக்கு பிரியாணி
- வேலூர் மாவட்ட தலைவர் வேல்முருகன் அறிக்கை
- குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்.
வேலூர்:
விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வேலூர் மாவட்ட தலைவரும், பொறுப்பாளருமான வேல்முருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தளபதி விஜயின் பிறந்த நாளில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி காலை 6 மணி அளவில் செல்லியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகமும், 8 மணி அளவில் வேலூர் திருப்பதி பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானமும் வழங்கப்படுகிறது.
தொடர்ந்து காலை 9 மணி அளவில் வேலூர் மாநகர சார்பில் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் நலத்திட்ட உதவி தையல் மெஷின்கள் ஆகியவை வழங்கப்படுகிறது. 10 மணி அளவில் வேலூர் ஒன்றியம் சார்பில் பாலமதி முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ரத்த தான முகாம் நடைபெறுகிறது. 11 மணி அளவில் காட்பாடி ஒன்றியம் சார்பில் 248 பேருக்கு மாபெரும் நலத்திட்ட உதவிகள் மற்றும் 548 பேருக்கு பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
பகல் 12 மணி அளவில் வேலூர் மாவட்ட தலைமை மற்றும் குடியாத்தம் நகர தலைமை சார்பில் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்படுகிறது. பின்னர் வேலூர் மாவட்ட அலுவலகத்தில் 48 கிலோ கேக் வெட்டி ஏழை எளியோருக்கு வழங்கப்படுகிறது. மதியம் 1 மணி அளவில் 1048 பேருக்கு பிரியாணி வழங்கப்படுகிறது. மாவட்ட நகர ஒன்றிய பகுதிகளிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.