உள்ளூர் செய்திகள்

பாலாற்றில் மணல் கடத்திய 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்

Published On 2023-04-07 15:12 IST   |   Update On 2023-04-07 15:12:00 IST
  • வாலிபர் கைது
  • ஜெயிலில் அடைப்பு

அணைக்கட்டு:

பள்ளிகொண்டா அருகே மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுவதாக தொடர்ந்து பல்வேறு புகார் வந்ததையடுத்து பள்ளிகொண்டா போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

நேற்று பள்ளிகொண்டா அடுத்த வடகாத்திபட்டி சுடுகாடு அருகே ரோந்து சென்ற போது பாலாற்றில் இருந்து 5 மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி விற்பனைக்கு எடுத்து சென்றுகொண்டு இருந்தது தெரியவந்தது.

போலீசார் வருவதை கண்டதும் மாட்டு வண்டிகளை அங்கேயே நிறுத்திவிட்டு 5 பேர் தப்பியோடினர்.

இதில் ஒருவரை மட்டுமே போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் 5 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News