உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் தரையில் அமர்ந்து நாராயணன் போராட்டம் செய்த காட்சி.

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே முதியவர் திடீர் போராட்டம்

Published On 2023-03-29 09:48 GMT   |   Update On 2023-03-29 09:48 GMT
  • நிலத்தை ஆக்கிரமித்து அரசு நூலகம் கட்டுவதாக புகார்
  • நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

வேலூர்:

வேலூர் அருகே உள்ள அரியூரை சேர்ந்த சூரிய நாராயணன் (வயது 62) இவர் இன்று காலை வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் முன்பு தரையில் அமைந்து தனியாக போராட்டத்தில் ஈடுபட்டார்.

சத்துவாச்சாரி போலீசார் வந்து அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது அரியூரில் எனது தந்தை சிவானந்த முதலியாருக்கு சொந்தமான 14 சென்ட் காலி இடத்தை அரசு ஆக்கிரமித்து பொது நூலகம் கட்டி வருகின்றனர்.

நான் அரசு அதிகாரிகளிடம் சென்று முறையிட்டும் அதிகாரிகள் இந்த இடம் அரசுக்கு சொந்தமானமதாக அலட்சியமான பதிலை கூறுகிறார்கள்.

தாசில்தார், கிராம நிர்வாகி, கலெக்டர் ஆகியோரிடம் முறையிட்டும் எந்த பயனும் இல்லை, இந்த சொத்துக்குரிய ஆவணங்கள் அனைத்தும் இன்று வரை எனது தந்தை சிவானந்த முதலியார் பெயரில் உள்ளதிற்கான அனைத்து முறையான ஆவணங்கள் எங்களிடம் உள்ளது.

சர்வேயருக்கு பணம் கட்டியும் அவர் இதுநாள்வரை அளப்பதற்கு வரவில்லை. ஆகையால் சம்மந்தப்பட்ட அதிகாரி மேற்படி நடவடிக்கை எடுத்து எங்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் எனக் கூறினார்.

இதையடுத்து அவர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துவிட்டு சென்றார்.

Tags:    

Similar News