உள்ளூர் செய்திகள்

பஸ்சில் தொங்கியபடி பயணம் செய்த மாணவன் தவறி விழுந்து சாவு

Published On 2023-08-12 08:57 GMT   |   Update On 2023-08-12 08:57 GMT
  • கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டிருந்தது
  • பின் சக்கரம் அவர் தலை மீது ஏறி நசுங்கியது

வேலூர்:

காட்பாடி அடுத்த சின்ன அரும்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்.இவருடைய மகன் கார்த்திகேயன் (வயது 16), காட்பாடி காந்திநகரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

நேற்று மாலை பள்ளி முடிந்ததும் அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்தார். கூட்டம் அதிகமாக இருந்தால் பஸ்சின் முன்பக்க படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தார். காட்பாடி-குடியாத்தம் சாலையில் பஸ் செல்லும் போது எதிர்பாராத விதமாக படியில் இருந்து கார்த்திகேயன் தவறி கீழே விழுந்தார்.

கண் இமைக்கும் நேரத்தில் பஸ்சின் பின் சக்கரம் அவர் தலை மீது ஏறி நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற பயணிகள் அதிர்ச்சியடைந்து திகைத்து நின்றனர்.

தகவல் அறிந்த காட்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவர்கள் பஸ்களில் படிக்கட்டில் பயணம் செய்கிறார்களா? என போலீசார், ஆசிரியர்கள் அடங்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டிருந்தது.

அந்த கண்காணிப்பு குழுவினர் பஸ் நிறுத்தங்களில் நின்று கண்காணிப்பார்கள். சமீப காலமாக பஸ் நிறுத்தங்களில் கண்காணிப்பு குழு நிற்பதில்லை.

அவர்களை மீண்டும் தீவிரமாக கண்காணிக்க கலெக்டர் உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News