உள்ளூர் செய்திகள்
விபத்தில் சிக்கிய காரை படத்தில் காணலாம்.
சாலை தடுப்பில் கார் மோதி விபத்து
- அதிர்ஷ்டவசமாக 3 பேர் உயிர் தப்பினர்
- போக்குவரத்து பாதிப்பு
வேலூர்:
கிருஷ்ணகிரியில் இருந்து சென்னை நோக்கி இன்று காலை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.
காரில் டிரைவர் உட்பட 3 பேர் பயணம் செய்தனர்.
வேலூர் அடுத்த அலமேலுமங்காபுரம் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி தடுப்பில் மோதியது.
இதில் கார் முன்பகுதி சேதமானது. காரில் பயணம் செய்த 3 பேர் லேசான காய்களுடன் உயிர் தப்பினர்.
இந்த விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து அப் பகுதி பொதுமக்கள் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகிறார்.