உள்ளூர் செய்திகள்
பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவிலில் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள்.
2 ஆயிரம் ஆண்டு பழமையான உத்திர ரங்கநாதர் கோவில்
- 2 மாதத்தில் உண்டியல் காணிக்கை ரூ.2.80 லட்சம் வசூல்
- ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அரங்கநாயகி உடனுறை உத்திர ரங்கநாதர் கோவில் உள்ளது.
இங்கு வேலூர் மாவட்டம் மட்டுமன்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கோவில் உண்டியல் காணிக்கை எண்ணப்ப ட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று மீண்டும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இந்து சமய அறநிலை த்துறை செயல் அலுவலர் நரசிம்மமூர்த்தி மற்றும் தக்கார் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் கோவில் பணியாளர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் கடந்த 2 மாதத்தில் ரூ. 2.80 லட்சம் காணிக்கை பணம் வசூலாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.