கொலையான வாலிபரை கண்டுபிடிக்க 10 ஆயிரம் பேர் விவரங்கள் சேகரிப்பு
- தனிப்படை போலீசார் தீவிர விசாரணை
- வேலூர் கோட்டை அகழியில் பிணமாக மீட்பு
வேலூர்:
வேலூர் கோட்டை அகழியில் கடந்த செப்டம்பர் மாதம் 19-ந் தேதி கழுத்து அறுக்கப்பட்டு அழுகிய நிலையில், தரைவிரிப்பால் சுற்றப்பட்டு வாலிபர் பிணம் மிதந்தது.
அவருடைய கையில் ஆங்கில எழுத்தில் சித்ரா என்றும், மேலும் சில எழுத்துக்களும் பச்சை குத்தப்பட் டிருந்தது. அதைத்தொடர்ந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வேலூர் வடக்கு போலீ சார் வழக்குப்பதிவு செய்தனர். இறந்த வாலிபர் யார்?, எந்த பகுதியை சேர்ந்த வர், அவரை கொலை செய்த மர்மந பர்கள் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அவர் குறித்த தகவல் எதுவும் கிடைக்க வில்லை.
இறந்தவர் யார் என்பதையும், அவரை கொலை செய்த குற்றவாளி களை கண்டறியவும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டனர். பல்வேறு மாவட்டங் களும், பிற மாநிலங்களுக்கும் சென்றும் விசாரணை நடத்தினர்.
ஆனால் இந்த வழக்கில் எந்தவித தகவலும் போலீசாருக்கு கிடைக்க வில்லை என்று கூறப்ப டுகிறது. இந்த கொலை சம்பவத்தில் தொடர்பு டையவர்கள் குறித்து கண்டறிய வேலூர் மாநகரப் பகுதியில் உள்ள கண்கா ணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
கொலை செய்து வீசப்பட்ட வாலிபர் தமிழகத்தைச் சேர்ந்தவர் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.
இந்த நிலையில் அவர் ஆந்திரா அல்லது கர்நாடக மாநிலங்களை சேர்ந்தவராக இருக்கலாம் என சந்தேகம் அடைந்துள்ளனர். இதனையடுத்து தனிப்படை போலீசார் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த 2 மாநிலங்களிலும் காணாமல் போன 10 ஆயிரம் வாலிபர்களுடைய விவரங்களை போலீசார் சேகரித்துள்ளனர். அதன் மூலம் கொலையான வாலிபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.