உள்ளூர் செய்திகள்

வேதாரண்யம் நகர்மன்ற கூட்டம் நடந்தது.

வேதாரண்யம் நகராட்சி கூட்டம்

Published On 2023-09-02 09:47 GMT   |   Update On 2023-09-02 09:47 GMT
  • 24 களப்பணியாளர்களை டெங்கு நோய் தடுப்பு பணிக்கு அமர்த்த வேண்டும்.
  • நகராட்சிக்கு 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் வாகனம் வாங்க வேண்டும்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் நகராட்சியின் சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் புகழேந்தி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் வெங்கடலட்சுமணன், பொறியாளர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், வேதாரண்யம் நகராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் மகாராஜபுரம் பகுதியில் அறிவுசார் மையம் அமைக்கும் பணி மேற்கொள்வது, கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்படும் பழுதுகளை உடனடியாக சீர் செய்வது, நகராட்சி பகுதியில் பயன்பாடுகள் இல்லாத கழிவறை கட்டிடங்களை அகற்றுவது, நகராட்சியில் சாலையோரம் வளரும் புற்களை வெட்டு வதற்கு புல் வெட்டும் எந்திரம் வாங்குவது, வேதாரண்யம் நகராட்சி பகுதியில் 24 டெங்கு களப்பணியாளர்களை டெங்கு நோய் தடுப்பு பணிக்கு அமர்த்துவது, நகராட்சிக்கு 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் வாகனம் வாங்குவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News