உள்ளூர் செய்திகள்

உற்சவர் சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தபோது எடுத்த படம்

தோரணமலை கோவிலில் வருண கலச பூஜை

Published On 2023-03-10 13:53 IST   |   Update On 2023-03-10 13:53:00 IST
  • தென்காசி-கடையம் செல்லும் சாலையில் உள்ள தோரணமலை முருகன் கோவிலில் இன்று காலை வருண கலசம் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
  • ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

கடையம்:

தென்காசி-கடையம் செல்லும் சாலையில் உள்ள தோரணமலை முருகன் கோவிலில் விவசாயம் செழிக்கவும், விவசாயிகள் நலம் பெறவும், மழை வேண்டியும் இன்று காலை வருண கலசம் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதனையொட்டி மலையில் உள்ள சுனையில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு அடிவாரத்தில் பிள்ளையார் கோவில் அருகே உற்சவர் சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் , அலங்கார, தீபாராதனை நடைபெற்றது . இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.

Tags:    

Similar News