வன்னியர் சங்க மாநிலச் செயலாளர் கார்த்தி, முன்னாள்
எம்.எல்.ஏ தமிழரசு ஆகியோர் கோர்ட்டில் ஆஜராக வந்த காட்சி.
சேலம் கோர்ட்டில் வன்னியர் சங்க மாநில செயலாளர் ஆஜர்
- கடந்த 2016-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபை தேர்தலின்போது, பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர்களான, ஓமலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் தமிழரசு, மாநில வன்னியர் சங்க செயலாளர் பெரியார் சிலைக்கு அனுமதி பெறாமல் மாலை அணிவித்ததாக போலீசார் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
- வழக்கின் விசாரணையை நீதிபதி அடுத்த மாதம் 2-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
சேலம்:
கடந்த 2016-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபை தேர்தலின்போது, பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர்களான, ஓமலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் தமிழரசு, மாநில வன்னியர் சங்க செயலாளர் கார்த்தி, மாநகர மாவட்ட செயலாளர் அருள் எம்.எல்.ஏ, மாநகர் மாவட்ட தலைவர் கதிர்.ராஜரத்தினம் ஆகியோர் பெரியார் சிலைக்கு அனுமதி பெறாமல் மாலை அணிவித்ததாக போலீசார் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில், இன்று காலை சேலம் ஜெ.எம்.1 கோர்ட்டில் ஓமலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் தமிழரசு (தற்போது தி.மு.க.வில் உள்ளார்), மாநில வன்னியர் சங்க செயலாளர் கார்த்தி ஆகியோர் நீதிபதி கலை
வாணி முன்பு ஆஜரா னார்கள். மூத்த வழக்கறி ஞர்கள் வக்கீல் விஜயராசா, குமார், கண்ணன் ஆகியோர் ஆஜராகினர். வழக்கின் விசாரணையை நீதிபதி அடுத்த மாதம் 2-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.