உள்ளூர் செய்திகள்

மதிப்புக்கூட்டு பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகள்.

விவசாயிகளுக்கு மதிப்புக் கூட்டுதல் பயிற்சி

Published On 2022-08-11 11:02 GMT   |   Update On 2022-08-11 11:02 GMT
  • வேளாண்மை துறை அட்மா திட்டம் மூலம் அறுவடைக்கு பின்சார் உத்திகள் மற்றும் மதிப்பு கூட்டுதல் பயிற்சி கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்றது.
  • வீட்டுத் தோட்டம், மண்புழு உரம் தயாரித்தல், காளான் வளர்ப்பு போன்ற தலைப்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுய தொழில் செய்ய பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

சீர்காழி:

சீர்காழி அருகே செம்மங்குடியில் வேளாண்மை துறை அட்மா திட்டம் மூலம் அறுவடைக்கு பின்சார் உத்திகள் மற்றும் மதிப்பு கூட்டுதல் பயிற்சி கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்றது.

ஊராட்சி மன்ற தலைவர் அசோகன் தலைமை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குனர் கா.ராஜராஜன் முன்னிலை வகித்தார். அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் கோ. பார்கவி வரவேற்றார்.

வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குனர் சங்கரநாராயணன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் மகேஸ்வரன் மதிப்பு கூட்டுதல் பற்றியும் அறுவடைக்கு பின் சார் தொழில்நுட்பங்கள் பற்றியும் தெளிவாக பயிற்சி அளித்தனர். தொடர்ந்து வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் ராஜாராம், விதைச்சான்று அலுவலர் கனகம், உதவி தோட்டக்கலை அலுவலர் சிவாஜி துறை சார்ந்த திட்டங்களை எடுத்துரைத்தனர்.

வீட்டுத் தோட்டம், மண்புழு உரம் தயாரித்தல், காளான் வளர்ப்பு போன்ற தலைப்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுய தொழில் செய்ய பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ராஜசேகரன், சவுந்தரராஜன் மேற்கொண்டனர். இறுதியில் உதவி வேளாண்மை அலுவலர்.ராமன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News